https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo
Home / அரசியல் / அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடை பெற்றது
https://youtu.be/qmborzDBDEo

அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடை பெற்றது

அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடை பெற்றது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயற்கை வளங்கள் கனிம வளங்கள் வனப்பகுதி பாதுகாப்பு குறித்து எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய தோழர்களுடன் ஒரு பயணம் என்ற நூல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை பாடப் பிரிவில் இருந்தது. இந்துத்துவா பின்னணி மிரட்டல் காரணமாக திடீரென நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் கஞ்சா விற்பனை, ஏரி ஆக்கிரமிப்பாளர்களை அம்பலப்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு மோசஸ் பாதுகாப்பு வழங்கும்படி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை கண்டுகொள்ளாமல் இருந்ததன் காரணமாக அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். செய்தியாளர் மோசசை பாதுகாக்க தவறிய காவல்துறையை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணியளவில் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பாக தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அயனாவரம் சி முருகேசன் தலைமையில் நடைபெற்றது, ஒருங்கிணைப்பாளர் துரை மதிவாணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் சி சந்திரகுமார், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், சி பி எம் எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் இரா அருணாச்சலம், தமிழ்த்தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் அருண்சோரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ் எம் ஜெயினுலாபுதீன், எஸ்டிபிஐ சட்டமன்றத் தொகுதி தலைவர் ஜாகிர் உசேன், மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை செயலாளர் ஐ.எம்.பாதுஷா, மக்கள் கலை இலக்கியக் கழகம் மாநகரச் செயலாளர் ராவணன், சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சு பழனிராஜன், ஏஐடியுசி தஞ்சை மாவட்ட செயலாளர் ஆர் தில்லைவனம், சமூக ஆர்வலர் ஆர் பிரசன்னா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

https://youtu.be/qmborzDBDEo

About Admin

Check Also

குண்டுராவ் தாயார் மரணம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆறுதல்

முன்னாள் முதல்வரின் தாயார் மரணம் | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆறுதல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://youtu.be/qmborzDBDEo