https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo
Home / செய்திகள் / கரூர் மாவட்ட போலீசாருக்கு சிரிப்பு யோகா – எஸ்.பி பாராட்டு
https://youtu.be/qmborzDBDEo

கரூர் மாவட்ட போலீசாருக்கு சிரிப்பு யோகா – எஸ்.பி பாராட்டு

 

கரூர் மாவட்ட  போலீசாருக்கு சிரிப்பு யோகா - எஸ்.பி பாராட்டு

கரூர் மாவட்ட போலீசாருக்கு மன அழுத்தத்தினை போக்கவும் அவர்களுக்காக சிரிப்பு யோகா பயிற்சி கரூர் மாவட்ட எஸ்.பி ஏற்பாடு

கரூர் மனவளக்கலையின் சார்பில் காவலர்களின் மன அழுத்தத்தினை குறைக்கும் வகையில் மாதத்தில் ஒரு நாள் சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த மாதம் இன்று காலை கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாருக்கு மன அழுத்தம் நீங்க, கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகலவன் முன்னிலையில், கரூர் அறிவுத்திருக்கோயில் மன வளக்கலை யோகா பேராசிரியர்கள் திருமூர்த்தி, முத்துக்கனி மற்றும் யோகா ஆசிரியர்கல் ஜெய்சங்கர், வனிதா, ரமாதேவி, விஜயலெட்சுமி ஆகியோர் பயிற்சி அளித்தனர். இந்த சிரிப்பு யோகா பயிற்சி, மனஅழுத்தம் போக்கும் சிறப்பு யோகா மூச்சுப் பயிற்சி வகுப்புகள் சிறப்பாக நடைபெற்றது.

கரூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த யோகா பயிற்சியில் சுமார் 200 க்கும் மேர்ற்பட்ட காவலர்கல் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும், இது குறித்து யோகா பேராசிரியர் திருமூர்த்தி கூறுகையில், சிரிப்பு யோகா என்பது வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பதை போலவே., நன்றாக வாய்விட்டுச் சிரிப்பதால் உடலில் என்டார்பின் என்கின்ற அமிலச் சுரப்பு நீர் நன்றாக சுரந்து உடலில் உள்ள மன அழுத்தத்தை குறைக்கின்றது. மேலும், நன்றாக சிரித்தால் நுரையீரல் மற்றும் இதயம் பலமடைகிறது‌. கணையத்திலும் இன்சுலின் சுரப்பு சரியாகி சர்க்கரை நோயாளிகளும் குணமடைகின்றனர் என்றார்.

https://youtu.be/qmborzDBDEo

About Admin

Check Also

மு.க.ஸ்டாலினை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அகில இந்திய மக்கள் கட்சியினர் ஆர்பாட்டம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கைது செய்ய வலியுறுத்தி அகில இந்திய மக்கள் கட்சியினர் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்ததோடு, மு.க.ஸ்டாலினை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://youtu.be/qmborzDBDEo