https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo
Home / தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை: பொலிவு பெற்ற கரூர் நகரம்
https://youtu.be/qmborzDBDEo

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை: பொலிவு பெற்ற கரூர் நகரம்

கரூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டம் மற்றும் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கி வைப்பு மட்டுமில்லாமல், புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் பழனிசாமி நாளை காலை கரூருக்கு வருகை தர உள்ளார்.

முதல்வர் வருகையையொட்டி, கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கரூர் நகரம்  முழுவதும் புத்தம் புதிய பொலிவு பெற்றுள்ளது. மேலும், நகரின் சாலைகளில் உள்ள சென்டர் மீடியன்கள்  சுண்ணாம்பு பூசப்பட்டு,  மண் குவியல்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெறுவதால், கரூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் முழுவதும் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டு மேலும், மெருகு கூட்டப்பட்டுள்ளது.

அதேபோல், கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கரூருக்கு வருகை தரும் தமிழக முதல்வரை வரவேற்கும் வகையில், மாவட்ட எல்லையான தவிட்டுப்பாளையம்  முதல் கரூர் பேருந்து நிலையம் வழியாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஏராளமான வரவேற்பு வளைவுகள் மற்றும் சாலையின் இரு புறங்களிலும்  அதிமுக  கட்சிக் கொடிகள் என கரூர் நகரம்  முழுவதும் பொலிவு பெற்றுள்ளது.

மேலும், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிவோர், முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்துத் துறை அலுவலர்கள், பத்திரிகையாளர்கள், காவலர்கள் என அனைவருக்கும் கடந்த இரண்டு நாட்களாக ஆட்சியர் அலுவலகம் கரூர் நகராட்சி அலுவலகம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல், நிகழ்ச்சியில் பங்கேற்கும் கட்சியினருக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் முன்கூட்டியே கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் நிகழ்ச்சி நடைபெறும் அன்று நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரையும் வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கவும் கரூர் மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo