https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo
Home / தூய்மைப்பணியாளருக்கு பொங்கல் பரிசு வழங்கி கெளரவித்த பெண் பஞ்சாயத்து தலைவர்
https://youtu.be/qmborzDBDEo

தூய்மைப்பணியாளருக்கு பொங்கல் பரிசு வழங்கி கெளரவித்த பெண் பஞ்சாயத்து தலைவர்

பொங்கல் பரிசு ஒன்றை தனது ஊராட்சிக்குட்பட்ட பெண் தூய்மை பணியாளருக்கு வழங்கி கெளரவித்த பெண் பஞ்சாயத்து தலைவரின் செயல் இப்பகுதி மக்களிடையே மட்டுமில்லாமல் தூய்மை பணியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காதப்பாறை பஞ்சாயத்து தலைவியாக செயல்பட்டு வருபவர் கிருபாவதி முருகையன், இவர் பட்டதாரி ஆசிரியை ஆன இவர், கடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்று பஞ்சாயத்து தலைவர் ஆனவரும் கூட, ஏற்கனவே கொரோனா நோய் தொற்று காலத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தினை மண்ணிற்கும் மக்களுக்கும் ஏற்றவாறு ஏதாவது ஒரு சிந்தனை மிக்க செயலை செய்ய வேண்டுமென்று கூறி, தொழிலாளர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டும், மழைநீரை சேகரிக்கும் பொருட்டும், நிலத்தடி நீர் மட்டத்தினை அதிகரிக்க மழைநீர் சேகரிப்பு முயற்சியை தென் தமிழக அளவில் ஒரு முன்னோடி பஞ்சாயத்து நிர்வாகமாக கொண்டு வந்தவருவம் ஆவார், இந்நிலையில் தூய்மைப்பணியாளர்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்து வந்தவரும் ஆவார்.

தமிழக அரசின் சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையொட்டி, பஞ்சாயத்து தலைவி கிருபாவதி முருகையன் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு ரூ 2 ஆயிரத்து 500 ம், பொங்கல் தொகுப்புகளாகிய முந்திரி, திராட்சை, கரும்பு ஆகியவற்றினை அவருடைய பஞ்சாயத்திற்குட்பட்ட தூய்மைப் பணியாளர் லட்சுமி என்ற ஒருவருக்கு பஞ்சாயத்து தலைவர் கிருபாவதி முருகையன் எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் கொடுத்தார். இந்நிகழ்வில் அவரது கணவரும் அதிமுக நிர்வாகியுமான முருகையன் உடனிருந்தார். இந்த செயல் கரூர் மாவட்ட அளவில் மிகுந்த வரவேற்பினையும் பாராட்டுகளையும் பிடித்துள்ளது. இதுமட்டுமில்லாமல், கொரோனா கால கட்டத்தில் ஏராளாமான நபர்களுக்கு இலவச முக கவசங்களையும் கொடுத்தவரும் ஆவார்.

https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo