https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo
Home / தொழிற்பேட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் ஆலயத்தில் சனிப்பிரதோஷ விழா
https://youtu.be/qmborzDBDEo

தொழிற்பேட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் ஆலயத்தில் சனிப்பிரதோஷ விழா

கரூர் அடுத்த தொழிற்பேட்டையில் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்க விஷேச சனிப்பெயர்ச்சி வழிபாடு மற்றும் விஷேச பூஜைகள் ஆலயம் சார்பாகவும், கரூர் சஷ்டி குழு சார்பாகவும் நடத்தப்பட்டது.

சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு கரூர் சஷ்டி குழு சார்பாக கரூர் தொழிற்பேட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண சுப்ரமணியர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் மஹாதீபாராதனையும் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சனிபகவானை தரிசனம் செய்தனர். இதற்கான முழு ஏற்பாடுகளை கரூர் சஷ்டி குழு மற்றும் தொழிற்பேட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் ஆலய நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது. மேலும் சுமார் 637 ஆண்டுகளுக்கு பிறகு குருவும், சனியும் இணைந்து செயல்படுவதால் இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் நலமுடன் வாழவும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்கவும், உலக அமைதி பெறவும் விஷேச சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது.

https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo