https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo
Home / செய்திகள் / மாணவிகள் மட்டுமல்ல, மற்றவர்களின் மனைவிகளையும் அபகரித்த ஒய்வு பெற்ற பேராசிரியர் குறித்து திடுக்கிடும் உண்மைகள் ! ஏராளமான புகார்கள் சென்றும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் ?
https://youtu.be/qmborzDBDEo

மாணவிகள் மட்டுமல்ல, மற்றவர்களின் மனைவிகளையும் அபகரித்த ஒய்வு பெற்ற பேராசிரியர் குறித்து திடுக்கிடும் உண்மைகள் ! ஏராளமான புகார்கள் சென்றும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் ?

மாணவிகள் மட்டுமல்ல, மற்றவர்களின் மனைவிகளையும் அபகரித்த ஒய்வு பெற்ற பேராசிரியர் குறித்து திடுக்கிடும் உண்மைகள் ! ஏராளமான புகார்கள் சென்றும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் ?

தமிழகத்திலேயே அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு ஒரு நற்பெயர் உண்டு இந்நிலையில்., அந்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஒய்வு பெற்ற ஒரு பேராசிரியரின் மன்மத லீலை ஒன்று தற்போது தமிழக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.

 

அண்ணாமலை பல்கலைக்கழகம் 1924 ம் ஆண்டு அன்றைய தென்னாற்காடு மாவட்டம் என்றழைக்கப்பட்ட கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் தொடங்கப்பட்டது. இந்த பல்கலை கழகத்தில் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இருந்து உதவிப்பேராசிரியர்களாக வேலைக்கு சேர்ந்து தற்போது வரை பணியாற்றி வருகின்றனர். அப்போது., சேலத்தில் இருந்து ஒரு குடும்பம் இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள இயற்பியல் துறையில் எஸ்.சந்திரா, அவர்கள் 2006 ம் ஆண்டு உதவி பேராசிரியராக பணியாற்ற துவங்கினார். அவருடைய கணவரும், இந்த பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு அந்த பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பணியாற்றிய முனைவர் கபிலன் என்பவர், அந்த குடும்பத்தலைவரிடம் அறிமுகம் ஆகின்றார். பிறகு, இருவரும் குடும்ப நண்பர்கள் போல் மாறி நன்கு பழகி வந்தனர். இந்த சூழ்நிலையில், முனைவர் கபிலன் அந்த குடும்ப நண்பரிடம் உங்களுடைய மனைவி எஸ்.சந்திராவிற்கு, நான் பி.எச்.டி படிப்பதற்கு முழு உதவி செய்கின்றேன் என்று உறுதி மொழி அளித்துள்ளார். இவரை நம்பி அந்த குடும்ப தலைவர் என் மனைவிக்கு தெரியாத விஷயங்களை நீங்கள் சொல்லி தருமாறு உரிமையுடன் கூறுகின்றார். பிறகு அந்த நண்பரின் மனைவியை கபிலன் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு 2011 முதல் இன்று வரை அந்த பெண் பேராசிரியருடன் கள்ளத்தொடர்பு வைத்து குடும்பம் போல நடத்தி வந்துள்ளார். இதையெல்லாம் தெரியாமல் அந்த குடும்ப நண்பர் கபிலனை தகப்பன் இடத்தில் வைத்து பார்த்துள்ளார். இதன் காரணமாக இருவரும் (கபிலன் மற்றும் சந்திரா) அந்த நண்பர் ஊரில் இல்லாத போது இரவிலும் பகலிலும் ஊர் சுற்றி திரிந்துள்ளனர். இதையெல்லாம் அறியாத அந்த நண்பருக்கு தெரியாத இந்த விஷயங்கள் எல்லாம் அந்த பல்கலைக்கழகத்தில் உள்ள மற்ற பேராசிரியர்களுக்கு நன்கு தெரியுமாம், ஆனால் இவர் அந்த அப்பாவி மற்றொரு பேராசிரியர் கபிலனை நன்கு நம்பியுள்ளார். அந்த குடும்ப நண்பருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதையெல்லாம் பொருட்படுத்தாமல், மற்றொருவரிடம் வாழ்ந்து வந்த அந்த பெண் பேராசிரியரும், அந்த வேதியியல் துறை ஆண் பேராசிரியரும் மறைமுகமாக கள்ளத்தொடர்பு வைத்து கொண்டு வாழ்க்கை நடத்தியதோடு, அந்த அப்பாவி புருஷனும், அந்த பேராசிரியருமான அவருக்கு துரோகம் விளைவித்து அவருடைய குடும்பத்தினையே இன்று சின்னாபின்னமாக்கி நாசமாக்கியுள்ளார். இவர், காமவெறி பிடித்த மனித மிருகம் ஆவார். இவரிடம் உதவிக்காக அறிமுகமாகும் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண் பேராசிரியர்கள் பி.எச்.டி படிப்பதற்கு உதவிகேட்கும் போதும் அவரது காமலீலை அடங்கவில்லை மேலும், படுக்கவே அழைப்பதாக குற்றச்சாட்டு. அதுமட்டுமில்லாமல், கபிலன் அந்த பெண்களுக்கு பிராஜக்ட் மற்றும் பி.டி.எப் படிப்பதற்கு உங்களை வெளிநாடு அனுப்பி வைக்கின்றேன் என்று சொல்லி., மூளைச்சலவை செய்து தன் இச்சைக்கு பயன்படுத்தி வந்துள்ளது பாதிக்கப்பட்டவர்களது ஸ்டேட்மேண்ட் ஆகும், இவருடைய கைப்பேசியை கடந்த ஐந்து வருடங்களில் போன் கால்களின் இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் லிஸ்ட்டுகளை எடுத்து பார்த்தால் அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளி வரும், இவர், இவருக்கு ஒரு மகன் உள்ளார். இவருக்கும் குடும்பம் உள்ளது என்பதை நினைத்து கூட பார்க்காத இவரை போன்று காம இச்சைக்கு பயன்படுத்தும் மன்மதலீலை புரிபவர்கள் மீதுபல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒரு சிலர் உயர் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளனர். இவரை போன்று மற்றவர்களின் மனைவிகளையும், மாணவிகளையும் காம வெறியோடு இச்சைக்கு பயன்படுத்துபவர்களை உடனடியாக அரசு அடையாளம் கண்டு தற்போது இந்த பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளானவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி தற்போது ஒய்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரை பற்றி அங்கு வேலை செய்யக்கூடிய பேராசிரியர்கள் மிகவும் வருத்தத்துடன் கூறியது தான் இதற்கு நல்ல ஒரு எடுத்து காட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/qmborzDBDEo

About Admin

Check Also

குண்டுராவ் தாயார் மரணம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆறுதல்

முன்னாள் முதல்வரின் தாயார் மரணம் | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆறுதல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://youtu.be/qmborzDBDEo