https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo
Home / தமிழகம் / விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து இந்து மகா சபா கட்சி சார்பில் திடீர் ஆர்பாட்டத்தினையடுத்து பரபரப்பு
https://youtu.be/qmborzDBDEo

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து இந்து மகா சபா கட்சி சார்பில் திடீர் ஆர்பாட்டத்தினையடுத்து பரபரப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து இந்து மகா சபா கட்சி சார்பில் திடீர் ஆர்பாட்டத்தினையடுத்து பரபரப்பு – கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மகா சபா கட்சி நிர்வாகிகளால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உருவ பொம்மை எரிப்பு சம்பவம் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் இந்து மகா சபா கட்சி கரூர் மாவட்ட தலைவர் மாயனூர் மு.ராஜவேல் தலைமையில், இந்து பெண்களை கொச்சையாக சித்தரித்த தொல்.திருமாவளவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் நரேன் கல்யாண், சித்தர் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், மாவட்ட மாணவரணி தலைவர் திவாகர், கன்னியாகுமாரி மாவட்ட தலைவர் அருள் ஆனந்த், ஆலய பாதுகாப்பு பிரிவு மாவட்ட செயலாளர் கரிகாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீரென்று தொல்.திருமாவளவனுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த ஆர்பாட்டத்தினையடுத்து அந்த பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் தீவிரப்படுத்தப்பட்டனர்.

https://youtu.be/qmborzDBDEo

About Admin

Check Also

`இரண்டு நாள்கள்… 8 மாவட்டங்களில் கனமழை!’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை,   இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி கடல் பகுதியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://youtu.be/qmborzDBDEo