https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo
Home / Boxes / மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் கரூர் தளவாபாளையத்தை சேர்ந்த 28 பேருக்கு பதக்கம்
https://youtu.be/qmborzDBDEo

மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் கரூர் தளவாபாளையத்தை சேர்ந்த 28 பேருக்கு பதக்கம்

மாநில அளவிலான சிலம்பப் போட்டி – 2021 யில் கரூர் தளவாபாளையத்தை சேர்ந்த 28 பேருக்கு பதக்கம்

தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் கழகம் சார்பில் ஆசான் களரி செல்வராஜ் அவர்கள் தலைமையில் கடந்த பிப்ரவரி 5 முதல் 7 வரை மூன்று நாட்கள் கன்னியாகுமரி பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ மஹாலில் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிலம்பப் போட்டி நடைபெற்றது. மினி சப் ஜூனியர், சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. குறிப்பாக கம்புச்சண்டை, கம்பு வீச்சு, வேல்கம்பு அலங்கார வீச்சு, ஒற்றை வாள்வீச்சு, ஒற்றை சுருள் வாள்வீச்சு இரட்டை வாள்வீச்சு, இரட்டை சுருள் வாள்வீச்சு, ஆயுத ஜோடி ஆயுதக்குழு விச்சு, குத்துவரிசை போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

 

இப்போட்டிகளில் தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளரும், கரூர் மாவட்ட சிலம்பம் தலைமை பயிற்சியாளரும், கரூர் தளவாபாளையம் அருகில் குன்னிக்காட்டூர் என்ற குக்கிராமத்தில் சர்வதேச சிலம்பம் ஆட்டசாலையை நடத்தி வருபவருமான பயிற்சியாளர் த.இலக்குவன் தலைமையில் அவரது மாணவ மாணவிகள் 25 பேர் பங்கேற்றனர். அதில் மினி சப் ஜூனியர் பிரிவில் தங்கம் – 3, வெள்ளி – 3, வெண்கலம் – 11 என மினி சப்-ஜூனியர் பிரிவில் மட்டும் 17 பதக்கங்களும் சப்-ஜூனியர் பிரிவில் வெள்ளி 4. வெண்கலம் 2 என 5 பதக்கங்களும் ஜூனியர் பிரிவில் வெண்கலம் சீனியர் பிரிவில் வெண்கலம் – 2 என ஒட்டுமொத்தமாக 28 பதக்கங்களை வென்று சாதனை படைத்து கரூர் தளவாபாளையம் பகுதிக்கு பெருமை சேர்த்துள்ளனர் வெற்றி பெற்ற கரூர் தளவாபாளையம் பகுதியைச் சேர்ந்த வீரர்களுக்கு தளவாபாளையம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பல்வேறு விளையாட்டு வீரர்கள் அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo