https://youtu.be/qmborzDBDEo
https://youtu.be/qmborzDBDEo
Home / செய்திகள் / அ.தி.மு.க என்கின்ற மாபெரும் இயக்கத்தினை யாராலும் அழிக்க முடியாது கரூர் அருகே அ.தி.மு.க வழக்கறிஞர் கரிகாலன் பேச்சு
https://youtu.be/qmborzDBDEo

அ.தி.மு.க என்கின்ற மாபெரும் இயக்கத்தினை யாராலும் அழிக்க முடியாது கரூர் அருகே அ.தி.மு.க வழக்கறிஞர் கரிகாலன் பேச்சு

அ.தி.மு.க என்கின்ற மாபெரும் இயக்கத்தினை யாராலும் அழிக்க முடியாது கரூர் அருகே அ.தி.மு.க வழக்கறிஞர் கரிகாலன் பேச்சு

 

ஒரு சாதாரண தொண்டருக்கு கூட நமது அ.தி.மு.க கட்சியில் பதவி மற்றும் புகழ் கிடைக்கும்

அ.தி.மு.க என்கின்ற மாபெரும் இயக்கத்தினை யாராலும் அழிக்க முடியாது கரூர் அருகே அ.தி.மு.க வழக்கறிஞர் கரிகாலன் பேச்சு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புகளூர் வட்டம், புஞ்சைப்புகளூர் பேரூர் கழகம் சார்பில் அ.தி.மு.க கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் பேரூர் கழக செயலாளர் கே.சி.எஸ்.விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் வழக்கறிஞர் அணி நிர்வாகி கரிகாலன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பேசிய அ.தி.மு.க வழக்கறிஞர் அணி நிர்வாகி கரிகாலன், தி.மு.க கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் பணம் சம்பதிப்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அ.தி.மு.க கட்சியில் சாதாரண தொண்டருக்கும் கட்சி பதவியும், உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத்திலும் சீட் கிடைத்து வெற்றி பெற்று மக்களுக்காக உழைக்கின்றனர். மேலும், தி.மு.க வில் கருணாநிதிக்கு பின்பு மு.க.ஸ்டாலின்,

மு.க.ஸ்டாலினுக்கு பின்பு உதயநிதி, உதயநிதிக்கு பின்பு இன்பநிதி என்று இன்றுவரை வாரிசு அரசியல் நட்த்தி வருகின்றனர். ஆனால், நமது இயக்கத்தினை தோற்றுவித்த டாக்டர் எம்.ஜி.ஆர் அவரின் மறைவிற்கு பின்னர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா., அவருக்கு பின்னர் ஐயா ஒ.பி.எஸ் மற்றும் ஐயா இ.பி.எஸ் என்று ஒரு சாதாரண தொண்டர் கூட முதல்வராகும் ஒரே இயக்கம் நமது அ.தி.மு.க கட்சி தான் என்றதோடு, வர இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு நமது கட்சிக்கு களங்கம் விளைவிக்க தி.மு.க வினர் சதித்திட்டம் தீட்டுவர், ஆனால் அதையெல்லாம் முறியடித்து விட்டு, நமது மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அகியோருக்காக நாம் இன்னும் பாடுபட வேண்டுமென்றார். ஆகையால் வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அனைவருக்கும் தெரியும், ஆனால், தி.மு.க கட்சி டெபாசிட் வாங்கக்கூடாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

https://youtu.be/qmborzDBDEo

About Admin

Check Also

குண்டுராவ் தாயார் மரணம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆறுதல்

முன்னாள் முதல்வரின் தாயார் மரணம் | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆறுதல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://youtu.be/qmborzDBDEo